விஜய் வீட்டுக்கே அதிரடியாக சென்ற த்ரிஷா! படு வைரலாகும் வீடியோ
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷா சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு அதிரடியாக சென்றுள்ள காணொளி வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
நடிகை த்ரிஷா இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார்கள். இன்றைய தினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கான தமிழகமே பெரும் எதிர்ப்பார்பில் காத்திருக்கின்றது.

நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.
சங்கீதா விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தான் விவாகரத்து கோருவதற்கான முக்கிய காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விஜய் த்ரிஷா ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் பங்கேற்றமை இணையத்தில் புயலையே கிளப்பியிருந்தது.

அதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் த்ரிஷா வாக்களித்துவிட்டு, கில்லி பட பாடல் உடன் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதனால் அவர் விஜய்யின் தவெக கட்சிக்கு தான் வாக்களித்து இருந்தார் என எல்லோருக்கும் தெரியவந்தது.

அதன் பின்னரும் சர்ச்சைகளை கண்டுக்கொள்ளாத த்ரிஷா, சிறுவர்கள் கில்லி திரைப்படத்தின் அப்படி போடு... பாடலுக்கு நடனமாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில், எல்லாவற்றுக்கும் மேலாக இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷா சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு அதிரடியாக சென்றுள்ள காணொளி வெளியாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது. காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |