ஐயம் ரெடி... 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவனுக்கு பதில் கொடுத்த த்ரிஷா!
த்ரிஷாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் இயக்குனர் செல்வராகவன் கேட்ட கேள்விக்கு 10 ஆண்டுகள் கழித்து ரிப்ளைக் கொடுத்துள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
இவர் லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு ரிப்ளை
I’m ready @selvaraghavan ? https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023
இந்நிலையில், நடிகை த்ரிஷாவிற்கு இயக்குனர் செல்வராகவன் 2013ஆம் ஆண்டு ஒரு ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்.
அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்த ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி பெரும் வெற்றி பெற்றது.
அதனால் இந்த திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததாகவும், த்ரிஷா மற்றும் வெங்கடேஷ் இருவரும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் எனவும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு 10 ஆண்டுகள் கழித்து நேற்றைய தினம் நான் ரெடி என்று பதிலளித்திருக்கிறார். இந்த செய்தி மூலம் குறித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹின்ட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |