என் மகன் இறந்துவிட்டான்... நடிகை த்ரிஷாவின் பதிவால் ரசிகர்கள் வருத்தம்
நடிகை த்ரிஷா தனது மகனை போல் வளர்த்து வந்த தன்னுடைய செல்ல நாய்குட்டி Zorro இன்று காலை இறந்துவிட்டதாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்து வருபவர் தான் நடிகை த்ரிஷா.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் ஹிட் கொடுத்தது.
இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெறியான தி கோட் திரைப்படத்தில் மட்ட பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் மற்றும் சூர்யாவின் 45வது படம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகின்றார்.
Zorroவின் மரணம்
இந்நிலையில் த்ரிஷா பாசமாக வளர்த்து வந்த Zorro எனும் நாய்குட்டி இன்று காலை உயிரிழந்து விட்டதாக த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தனது நாய் குட்டியின் புகைப்படங்களுடன் த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவகத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் ரசிகர்கள் பலரும் Zorroவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |