சேலையில் ஜொலிக்கும் த்ரிஷா... புகைப்படத்தை பதிவிட்டு என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
நடிகை த்ரிஷா காஞ்சிப்புரம் சேலை அணிந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்துவருவதுன், நாகரீகம் வரும் போகும் ஆனால் காஞ்சிபுரம் சேலை நிரந்தரமானது என அவர் குறிப்பிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தார்.
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் ஆடிய நடனம் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
தற்போது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் காச்சிபுரம் சேலை அணிந்து சாமி சிலை போல் கொள்ளை அழகில் த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |