அட த்ரிஷாவா இது? பள்ளி சீருடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க
நாம் பலரும் பார்த்திராத திரையுலக பிரபலங்களின் சிறுபராய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷாவின் பள்ளி காலத்து புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து த்ரிஷ் மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தற்போது பள்ளி உடையில் தனது தோழிகளுடன் நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணயத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |