தனுஷ்- சிம்பு சந்திப்பை பற்றி பேசுகிறாரா த்ரிஷா? Instagram story-ஆல் சந்தேகிக்கும் ரசிகர்கள்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் சிம்புவும், தனுஷும் சந்தித்து பேசிக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான வேளையில் த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணம்
சமீபக் காலமாக பிரபலங்களின் திருமணம் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியொரு சமயத்தில், தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. பாஸ்கரனின் திருமணத்தில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பல திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
அந்த சமயத்தில் தனுஷும், நயன்தாராவும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், சிம்பு- தனுஷ் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டதுடன், பயங்கரமாக சிரித்தும் பேசியிருக்கிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த இணையாவாசிகள், “இருவரும் அப்படி சிரிக்கும் அளவுக்கு என்ன பேசியிருப்பார்கள்” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
த்ரிஷா போட்ட இன்ஸ்டா ஸ்டோரி
இந்த சமயத்தில், நடிகை த்ரிஷா இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டோரியொன்றும் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதில், “ஒரு புத்திசாலி ஒருமுறை என்னிடம் கூறினார், உன்னை மனமுடைய செய்தவர் அவர் தான் என தெரிந்தும் அவருடன் நெருக்கமாக இருக்கும், நட்பாக பழகும் நபருடன் நெருக்கமாக இருக்கக் கூடாது..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், “த்ரிஷா இப்படி தாக்கியிருப்பது சிம்புவை தான்..” என பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் இல்லாமல் த்ரிஷா இன்ஸ்டாவில் ஸ்டோரி போட மாட்டார் . அதுவும் சிம்பு, தனுஷ் சந்திப்பு புகைப்படம் வைரலாகியிருக்கும் நேரத்தில் இப்படியொரு ஸ்டோரி
போட்டிருக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது.. எனவும் விமர்சகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |