40 வயதிலும் இளம்நடிகைகளை ஓவர்டேக் செய்யும் திரிஷா! இவரது ஃபிட்னஸின் ரகசியம் இதோ
Trisha
By Manchu
40 வயதை நெருங்கும் திரிஷா கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். இதற்காக அவர் பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
நடிகை திரிஷா
தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
தற்போது, 40 வயதை நெருங்கும் திரிஷா, மணிரத்தினம் இயக்கத்தில் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதிலும் திரைக்கு வரவிருக்கும் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில், 20 வருடங்களுக்கு முன்பு பார்த்தது போல் அதே பிட்னஸ் உடன் காணப்படுகின்றார். இந்நிலையில் திரிஷாவின் பிட்னஸ் ரகசியம் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.

திரிஷாவின் பிட்னஸ் ரகசியம்
- காலையில் வெறும் ஊட்ட சத்து மிக்க பழங்கள் மட்டுமே, பொரித்த, வறுத்த உணவுகளுக்கு இடம் கிடையாதாம்.
- வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
- வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவர். அதில் ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிட்டவை இவருக்கு பிடித்தமானவையாகும்.
- தினசரி யோக, உடற்பயிற்சி, தியானம் மேற்கொள்வது.
- ஃபிரெஸ் ஜூஸ் மட்டுமே குடிப்பார். அதேபோல வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழரச பானங்கள் விரும்பி குடிப்பவராம்.

- சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கு இடமே கிடையாதாம்.
- உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம்.
- அவர் கையில் எப்போதும் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்று இருக்கும்.
- இருப்பினும், அவர் பிரியாணி விரும்பி சாப்பிடுவாராம். ஒரு வேளை உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார். தேவைபட்டால் ஒரு நாள் முழுவதும் பட்டினி கூட இருப்பாராம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US