திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு... வைரலாகும் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள சிறப்பு பதிவு
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சினிமாவில் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் தன் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார்.
80களில் நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
அதனை தொடர்நந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியியிருந்தார்.மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்கள் த்ரிஷாவின் கைவசம் உள்ளன.
இந்நிலையில் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 22 ஆண்டுகள் முடிந்துள்ளதாக தற்போது நடிகை த்ரிஷா உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் சினிமாவில் அறிமுகமாகி இன்று 22 ஆண்டுகள் ஆகி உள்ளது. ரசிகர்களான உங்களால் தான் இது அனைத்தும் நடந்தது அதற்கு மிகவும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |