விஜய் - த்ரிஷா மீண்டும் ஹாட் டாப்பிக்: சமூக வலைதளங்களில் வைரலான முக்கிய 5 தருணங்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீப காலமாக பெரிய அளவில் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தாலும், எந்த சர்ச்சை குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தாலும், மாதத்திற்கு குறைந்தது சில முறையாவது ஊரே பேசும் ஹாட் டாப்பிக்காக மாறிவிடுகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் முதல்வர் விஜய் பங்கேற்ற சுதந்திர தின விழாவில் த்ரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்தது, தற்போது தவெக தொண்டர்கள் மற்றும் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையடுத்து விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக பொதுவெளியில் தோன்றி பேசுபொருளான முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய விடயங்கள் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
த்ரிஷா ஏன் தொடர்ந்து பேசுபொருளாகிறார்?
மார்ச் 5 திருமண வரவேற்பில் விஜய் - த்ரிஷா

விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்தலுக்கு முன்பு மனு தாக்கல் செய்த சமயத்தில், அவரது சட்டப்பூர்வ மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில், விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருப்பதை 2021ஆம் ஆண்டிலேயே தான் கண்டுபிடித்ததாகவும், அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த நாளே கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிலும் இருவரும் ஒரே மாதிரியான தங்க நிற உடையில் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மே 4 வாக்குப்பதிவுக்குப் பிறகு த்ரிஷாவின் பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் களம் கண்டார். தேர்தல் நாளன்று காலையிலேயே தனது தாயாருடன் சென்று வாக்களித்த த்ரிஷா, சில மணி நேரங்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
அதில், ‘கில்லி’ படத்தின் விசில் மியூசிக்குடன் தான் வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக வெற்றி பெற்றது உறுதியான நிலையில், அன்றைய தினமே விஜய்யை சந்திப்பதற்காக த்ரிஷா அவரது நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார். அதனால் இணையத்தில் மீண்டும் வைரலானார்.
மே 10 பதவியேற்பு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட த்ரிஷா

தவெக வெற்றியைத் தொடர்ந்து விஜய் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது த்ரிஷாவும் தனது தாயாருடன் விழாவில் பங்கேற்றார்.
விஜய், “சி. ஜோசப் விஜய் எனும் நான்...” என உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது, த்ரிஷா தனது அழுகையை அடக்கிக்கொண்டு பெருமிதத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகின.
மே 31 – அஜித் தாயார் மறைவு

விஜய் முதல்வராக பதவியேற்றிருந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக விஜய் உடனடியாக அஜித்தின் இல்லத்திற்கு சென்றார். அப்போது அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார்.இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
ஆகஸ்ட் 15 – சுதந்திர தின விழாவில் முன்வரிசையில் த்ரிஷா

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா அருகே, தலைமைச் செயலகத்தை ஒட்டிய பகுதியில் தேசியக் கொடியேற்றம் மற்றும் சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் கலந்து கொண்டார். அவருக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
விழாவின் போது முதல்வர் விஜய்யை நோக்கி மற்றவர்களுடன் இணைந்து த்ரிஷா சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு, விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகவோ அல்லது ஒரே நிகழ்வில் இடம்பெறும் காட்சிகளோ வெளியாகும் போதெல்லாம், அது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் உடனடியாக பேசுபொருளாகி வருகிறது. இது தொடர் நிகழ்வாகவே மாறி வருகின்றது என்றால் மிகையாகாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |