சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள்
நடிகை த்ரிஷா மே நான்காம் திகதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதே நாளில் விஜய்க்கு முதலமைச்சர் வெற்றியும் கிடைத்தது. இந்த நிலையில் நடிகை ஒருவர் த்ரிஷாவிற்கு இரட்டை வாழ்த்து சொன்னதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நடிகை த்ரிஷா
விஜய்யின் தனிப்பெரும் கட்சியாக தவெக கட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. இது வரலாற்றிலே விஜய்க்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இத்தகைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவிற்கு மே நான்காம் திகதி பிறந்தநாள் இருந்தது.
இதே நாளில் தான் விஜய் மக்கள் வாக்குகள் மூலம் முதலமைச்சராக வெற்றி பெற்றார்.
நேற்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சிறப்பு பூஜை செய்தார். அதேபோல், நடிகை திரிஷா அவர்களின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை முன்னிட்டு மே 3ஆம் தேதி காரில் திருப்பதிக்கு சென்ற அவர், மே 4ஆம் தேதி அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தார்.

இதன் பின்னர் விஜய்யின் வீட்டிற்கே சென்று த்ரிஷா ஸ்வீட் கொடுத்து விஜய்யை சந்தித்துவிட்டும் வந்தார்.
நடிகை த்ரிஷாவிற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா என்ன தான் விஜய்யுடன் தொடர்புபடுத்தி பேசினாலும் அதற்கான அதிகாரபூர்வ ஆதாரங்கள் இல்லை.
இப்படி இருக்க நடிகை த்ரிஷாவிற்கு ராதிகா மற்றும் லக்ஷ்மி மஞ்சுவின் வாழ்த்துக்கள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
நடிகை லக்ஷ்மி மஞ்சு வெளியிட்ட வாழ்த்து வாழ்த்து பதிவில், “என்றென்றும் வசீகரமான, அழகான த்ரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கொண்டாட்டத்துக்கு ஏற்ற நாள். மிகப்பெரிய வெற்றியுடன் இந்த பிரபஞ்சம் உனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கிறது.
இன்று உனக்கு இரட்டை கொண்டாட்டம். அதியசயமான நிகழ்வு டார்லிங்!” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல நடிகை சார்மி கவுர் வெளியிட்டிருந்த பதிவில், “உன்னுடைய சிறப்பான இந்த நாளில் சிறப்பான கொண்டாட்டம். நீ ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னம்.
நான் எப்போதும் சொல்வது போல, பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இந்தப் பிறந்தநாள் வரலாற்றின் ஏடுகளில் ஒரு வெற்றியாகப் பதியப்படும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக நடிகை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நடிகை ராதிகா, “பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா.. என்ன ஒரு கிஃப்ட்” (What a gift). என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய் வெற்றிக்கு த்ரிஷாவை ஏன் வாழ்த்துகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.