கைகோர்க்கும் மூன்று கிரகங்கள் - துலாம், மீனம், மகரம் இந்த ராசிகளுக்கு என்ன பலன்?
ஜனவரி 17, 2026 பொங்கலுக்குப் பின்னர் மகர ராசியில் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இது மூன்று ராசிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
‘திரிகிரக யோகம்’
ஜோதிடத்தின்படி மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக சஞ்சரிப்பது ‘திரிகிரக யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி சூரியன், புதன், சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரித்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றனர்.
இந்த நேரத்தில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை புதாதித்ய ராஜயோகத்தையும், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சுக்கிராதித்ய ராஜயோகத்தையும் உருவாக்குகிறது.
இது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நல்ல ராஜயோகத்தை கொடுக்கும். அந்த ராசிகள் வாழ்க்கையில் 17ம் திகதியில் இருந்து பார்ப்பார்கள் என கூறப்படுகின்றது. அந்த பலன்களை பற்றி பார்க்கலாம்.

மீனம்
திரிகிரக யோகம் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியான நன்மைகளை வழங்க இருக்கிறது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிவடைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் காணப்படும். நிதி நிலைமை உயரத் தொடங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு அல்லது நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொட இருக்கிறீர்கள். இந்த காலகட்டத்தில் வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். பொன், பொருள், இன்பங்கள் சேரும். புதிய வாகனங்கள் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். பரம்பரை அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கிடைக்கலாம். வலுவான லாபம் ஈட்ட வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகள் இனிமையானதாக மாறும். பணியில் இருப்பவர்களுக்கு சலுகைகள், போனஸ் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருப்பதால் மகர ராசிக்காரர்கள் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கணிசமாக குறையும். சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மாமனார், மாமியார் வழியில் இருந்த சங்கடங்கள் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).