கொதிக்கும் பாலை எடுத்து குழந்தை மீது ஊற்றிய பூசாரி - அதிர்ச்சி வீடியோ
கொதிக்கும் பாலை எடுத்து குழந்தை மீது ஊற்றிய பூசாரியின் அதிர்ச்சி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொதிக்கும் பாலை ஊற்றிய பூசாரி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு கோவில் திருவிழாவில் ஒன்றரை வயது குழந்தை மீது பூசாரி ஒருவர் கொதிக்கும் பாலை கையால் எடுத்து ஊற்றுகிறார். பிறகு அந்த குழந்தை மீது சாதாரண தண்ணீரை ஊற்றுகிறார்.
மீண்டும் கொதிக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குழந்தை மீது ஊற்றுகிறார். அக்குழந்தை வலியால் கத்தி கதறி அழுது துடிதுக்கிறது. பிறகு, அக்குழந்தையை ஒரு கையால் பிடித்தவாறு மாலை எடுத்து அக்குழந்தையின் கழுத்தில் சுற்றுகிறார்.
இக்காட்சிகளை அங்கிருந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் யாரோ ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பூசாரியை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது அக்குழந்தை நலமுடன் இருக்கிறதா என்று கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
The priest pours boiling hot milk on the child. Cruelty on children in the name of God is not acceptable. pic.twitter.com/2Jg1y0hPrr
— The Dalit Voice (@ambedkariteIND) April 11, 2023