எடையை குறைப்பு முதல் பல அற்புத நன்மைகளை தரும் ஊறவைத்த உலர்திராட்சை... எப்படி சாப்பிடணும்?
ஊற வைத்த திராட்சைகள் ஏராளமான நன்மைகளை தன்னுடன் கொண்டுள்ளன. ஊற வைத்த திராட்சையானது ஊட்டச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. சர்க்கரைக்கு திராட்சை ஒரு சிறந்த மாற்று பொருளாகும். எனவே அவற்றை கொண்டு நீங்கள் சிற்றுண்டி செய்யலாம்.
ஊர வைத்த திராட்சையை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஊற வைத்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவை தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை கணிசமாக குறைக்கின்றன.
எனவே தொற்று நோய்களில் இருந்து விலகி இருக்க திராட்சை உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்த திராட்சை உதவுகிறது. ஊற வைத்த திராட்சையானது மல சிக்கலை சரி செய்கிறது. மேலும் இது உணவு நன்றாக ஜீரணமாக உதவி புரிகிறது. ஏனெனில் திராட்சை அதிகப்படியான நார்ச்சத்துக்களை கொண்டுள்ளன.
ஊற வைத்த திராட்சையும் ஊற வைத்த திராட்சை நீரும் கல்லீரலுக்கு நன்மை புரிகிறது. இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன மேலும் கல்லீரல் நச்சுத்தன்மையை குறைக்கின்றன. எனவே ஆரோக்கியமான உடலுக்கு ஊற வைத்த திராட்சை அவசியமாகிறது. பெண்களுக்கு எலும்பு குறித்த பிரச்சனைகள் அதிகமாக உள்ளன.
எலும்பு அடர்த்தி பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையாகும். திராட்சையில் கால்சியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. கால்சியமானது எலும்புக்கு நன்மை பயக்கிறது. மேலும் ஊற வைத்த திராட்சையை ஒவ்வொரு நாளும் உட்கொள்வதன் மூலம் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த முடியும்.
திராட்சையை உண்டப்பிறகு ஊறிய தண்ணியை வீணாக்க வேண்டாம். ஏனெனில் இந்த நீர் மிகவும் சத்தானதாகும். எனவே அதை குடிப்பது கூடுதல் நன்மை பயக்கும். இதன் மூலம் திராட்சையின் முழு சத்தையும் நீங்கள் பெற முடியும்.