நடுரோட்டில் போலீசாரிடம் வம்பிழுக்கும் நாய்... இணையத்தில் வைரலாகும் காட்சி
தமிழக போக்குவரத்து காவலர் ஒருவருக்கும், தெரு நாய்க்கும் இடையே உள்ள பாசக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
விலங்குகளில் நன்றியுள்ள ஜீவனாக இருப்பதும், வீட்டில் பெரும்பாலான நபர்களால் வளர்க்கப்படும் நாய்கள் செய்யும் சேட்டைகள் அதிகமாகவே அவதானித்து வருகின்றோம்.
ஒரே ஒரு வேலை சாப்பாடு வைத்தாலே நம்மைப் பார்க்கும் நேரம் எல்லாம் வாலை ஆட்டிவிட்டுச் செல்லும். அதே போன்று வீட்டில் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பதில் கவனம் இல்லாமல் இருந்தாலும், நாயின் கவனம் குழந்தை மீதே இருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், போக்குவரத்து காவலருக்கும் நாய்க்கும் இடையிலான அழகான பிணைப்பை கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது பணியில் இருக்கும் போக்குவரத்து காவலரின் கால்களை சுற்றி சுற்றி வருவதுடன், மிகவும் அழகாக விளையாடவும் செய்கின்றது. இக்காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |