ஆழ்கடலில் நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி
ஆழ்கடலில் நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலாப் பயணிகள் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி
சுற்றுலாத் தலம் என்றால் அது தாய்லாந்துதான் என்று சொல்வார்கள். அங்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தாய்லாந்தில் கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் என்ற இரு தீவு உள்ளது. இந்த தீவில் பவள பாறைகள் மற்றும் அழிவு விளிம்பில் உள்ள உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்நிலையில், சீன நாட்டைச் சேர்ந்த 2 பேர் கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் தீவுக்கு சென்றனர்.
அங்கு ஆழ்கடலில் உள்ள நட்சத்திர மீன்களைப் பிடித்தும், அதனுடன் செல்பி எடுத்தும், பவள பாறை மீது ஏறி சென்றுள்ளனர். நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவ, கடல்வாழ் பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
உடனடியாக, அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.