அசிங்கப்படுத்தும் தொப்பையை விரட்டனுமா? அப்போ இந்த காய்கறிகளை தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே அனைவருக்கும் கவர்சியாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் அதிகரித்த வேலைப்பளு, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கெமாள்ள முடிவதில்லை.
உடற்பயிற்சியில் ஈடுப்பட நேரமில்லாதவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்சியாக வேலை செய்பவர்களுக்கம் தொப்பபை பிரச்சினை வராமல் இருக்க வாய்ப்பில்லை.
இந்த பிரச்சினைக்கு இலகுவாக உணவுமுறை மூலம் எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பீன்ஸ்
பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். கரையக்கூடிய நார்ச்சத்தை உட்கொள்வது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம்.இது தொப்பையை குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயாகும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. நறுக்கப்பட்ட முட்டைக்கோஸில் 22 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.
கெரட்
தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் காய்களில் கேரட்டிற்கும் முக்கிய பங்கு உள்ளது. கேரட் ஜூஸ் குடிப்பதும் தொப்பையை குறைக்க உதவுகிறது.
அதனை வடிகட்டாமல் குடிக்கும் போதே நார்சத்துக்கள் உடலுக்கு போய் சேர்கின்றது. உடல் எடையை குறைப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி, கால்சியம் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளன. வைட்டமின் சி, கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.
எடை இழப்பு தவிர, ப்ரோக்கோலியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குகிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிறு விரைவில் நிரம்புகிறது. வெள்ளரிக்காய் சாறு குடிப்பது தொப்பையை குறைக்க உதவுகிறது.
ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இது தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |