உலகிலேயே மிக சோகமான நாடு எது தெரியுமா? பட்டியலில் இந்தியாவும் இருக்காம்..
புவியில் உள்ள 195 நாடுகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன. இருப்பின் அந்த நாடுகள் அதனை மறந்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றன.
ஆனால் சில நாடுகளில் உள்ள மக்கள் அதிகமான பொருளாதார நெருக்கடி, போர் பயம், இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட காரணங்களால் தங்களின் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு சோகத்தில் வாழ்கிறார்கள்.
பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், நாடுகளுக்கு இடையேயான வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், சோகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் நாட்டில் ஊழல் விகிதம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் குறிப்பிட்டப்படி, உலகில் அதிகமான சோகத்துடன் வாழும் மக்கள் உள்ள நாடுகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் | மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ் தான் கடைசியாக உள்ளது. 147வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அடக்குமுறையால் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை முற்றாக தடைச் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. |
சியரா லியோன் | மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன் உலகின் இரண்டாவது சோகமான நாடாக பார்க்கப்படுகிறது. 146 ஆவது இடத்தில் இருக்கும் இந்த நாட்டில் போர் காரணமாக கடுமையான வறுமை நிலவி வருகிறது. |
லெபனான் | லெபனான் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 145 வது இடத்திலும், சோகமான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அரசியல் ஊழல் காரணமாகவும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. |
இந்தியா | 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 147 நாடுகளில் இந்தியா 118வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வருடம் 126ஆவது இடத்தில் இருந்தது. தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருப்பதால் இந்த மாற்றம் நடந்துள்ளது. மதவாத மோதல்கள், பொருளாதார சிக்கல்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் போதுமான திட்டமின்மை உள்ளிட்ட காரணங்கள் தான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. |
காங்கோ | மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் காங்கோ ஜனநாயகக் குடியரசு 142வது இடத்தில் உள்ளது. ஏனெனின் இங்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போர். காங்கோ மக்களை வறுமையில் வாடச் செய்துள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
