உன் தமிழ எவன்டா கேப்பான்னு சொன்னாங்க... வாகீசன் ஓபன் டாக்
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முக்கிய குக்களில் ஒருவரான இலங்கை ராப் பாடகர் வாகீசன் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், தனது மொழிக்கு கிடைத்த அவமானங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் நிறைவு பெற்று, தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிகழ்ச்சியின் பாணியில் அதற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.இதில் சிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
மேலும் இரண்டாவது சீசனில் சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வாகீசன் ஓபன் டாக்
இந்த நிலையில், சீசன் 2 -ல் குக்காக அசத்திவரும் வாகீசன் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் ஆரம்ப காலத்தில் தனது திறமைக்கு கிடைத்த அவமானங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
வாகீசன் குறிப்பிடுகையில், ஆரம்ப காலத்தில் என் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை கிடைக்காதா என பேராடியிருக்கின்றேன்.
அந்த நேரங்களில் மேடைகளில் பாடியவர்கள் என்னை அவமானப்படுத்தியிருக்கின்றார்கள். உன் தமிழ எவன்டா கேப்பாங்க-ன்னு சொன்னாங்க.. உன் தமிழை ஊரைவிட்டு வெளியில் சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என கேலி செய்தார்கள்.
அதன் பின்னர் தான் நான் முடிவு செய்தேன், நான் இந்த தமிழில் தான் நான் பாடுவேன். அதை உலகமே கேட்க வைக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக அது இருக்க வேண்டும்.
அதிலிருந்து இரண்டு வருடங்களில் நான் அதை செய்து காட்டினேன் என வாகீசன் வெளிப்படையான குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |