இந்த ராசியினரை காதலித்தால் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது! உங்க துணையும் இந்த ராசியா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் துணையை அடிமையாக்கும் அளவுக்கு ரொமான்ஸ் பண்ணுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

அப்படி காதலைவெளிப்படுத்துவதிலும், ரொமான்ஸ் பண்ணுவதிலும் கில்லாடிகளாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

நியாயம் மற்றும் அழகின் ராசியான இது, காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. இயல்பாகவே, துலாம் ராசிக்காரர்கள் காதலிலும் ரொமான்டிக்காக பேசுவதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் துணையின் சிறிய விரும்பங்கயை கூட அறிந்து வைத்திருந்து இவர்களை எதிர்ப்பாராத நேரத்தில் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள்.
ஒருவர் தங்களுக்குப் பொருத்தமானவரா என்பதைத் தீர்மானிக்க அவர்கள் சற்றுத் தாமதிக்கலாம், ஆனால் ஒருமுறை தீர்மானித்துவிட்டால், அவர்கள் முழு மனதுடன் அதில் ஈடுபடுவார்கள். இவர்களை துணையாக அடைவததே பெரும் அதிர்ஷ்டம்.
விருச்சிகம்

காதல் உணர்ச்சியில், விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் மிஞ்சியவர்கள். அதுதான் ஒரு விருச்சிக ராசிக்காரருடனான காதலை மிகவும் சிலிர்ப்பூட்டுவதாகவும், போதை தருவதாகவும் ஆக்குகிறது.
வேறு எவராலும் கொடுக்க முடியாத அளவிற்கு அவர்களால் கவர்ச்சியான பார்வைகளை வீச முடியும். காதல் உணர்ச்சியில் மட்டும் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. விருச்சிக ராசிக்காரர்கள் விசுவாசமாக இருப்பதிலும் துணைக்கு மனநிறைவை கொடுக்கின்றார்கள்.
அவர்கள் ஒரு ஸ்திர ராசி என்பதால், எந்தப் பிரச்சினையுமின்றி ஒரு உறவில் நிலைத்து நிற்க முடியும். அவர்களின் காதல் அசைக்க முடியாததாக இருக்கும். இந்த ராசியினர் ரொமான்ஸ் செய்வதிலும் கில்லாடிகளாக அறியப்படுகின்றார்கள்.
சிம்மம்

சிம்ம ராசியினர் செய்யும் எல்லாவற்றையும் பிரம்மாண்டத்தை எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்ம ராசியினர் தாங்கள் காதலில் விழும்போது அதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் துணையை கொண்டாடக்கூடிய இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
தங்கள் காதலர் எவ்வளவு அற்புதமானவர் என்பதைப் பற்றி அவர்கள் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் காதலில் ரொமான்டிக்கான நிகழ்வுகளுக்கு பஞ்மே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |