வெள்ளி விலையில் வரலாறு காணாத மாற்றம்! ஒரே நாளில் ரூ.10 ஆயிரம் அதிகரிப்பு
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தங்கம், வெள்ளி விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக ஆர்வம் காட்டிவருகின்றார்கள்.

தங்க விலை
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.13,963-க்கும், சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.1,11,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 4 முறை தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலை உயர்வு
இந்நிலையில், இன்று வெள்ளி விலை அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.244-க்கும், கிலோ ரூ.2,44,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, எதிர்பாராத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |