நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, மாத இறுதியில் சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிவலரம்

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,120 என்ற அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2,55,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |