தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் இதோ!
இன்றைய (செப்டம்பர் 30) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் விலை நிலவரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை இரண்டு முறை குறைந்த நிலையில், நேற்றும் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,640-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் மாத கடைசி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11480க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் சரிவு தொடர்ந்தாலும், வெள்ளியின் விலை உயர்வைக் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.245-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாக உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |