ஏறிய வேகத்தில் கிடுகிடுவென இறங்கிய தங்கம் விலை! குதூகலத்தில் நகை பிரியர்கள்
தங்கம் விலை கடந்த இரு நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,705 ஆகவும், சவரன், ரூ.37,640 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5 ரூபாய் சரிந்து, ரூ.4,700ஆக குறைந்துவிட்டது.
தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதிலிருந்து ஏற்றத்துடனே காணப்பட்டது, ஆனால், இரு நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவு அடுத்தடுத்த நாட்களும் நீடிக்குமா அல்லது மாலையில் விலை அதிகரிக்குமா என்று நகைப்பிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆசை அதிகரித்தாலும், விலையில் நிலவும் ஏற்ற, இறக்கத்தால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.61.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது.