கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! கவலையில் நடுத்தர மக்கள்: விலை உயர்வுக்கு காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை 400 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்றும், சரவணுக்கு 40ரூபாய் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் சனிக்கிழமை 400 ரூபாய் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை கிராம் ரூபாய் 4770 ஆகவும், சவரன் ரூபாய் 38 ஆயிரத்து 160 ஆக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, 4,775 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து, ரூபாய் 38 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம், பங்கு சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுவதாலும், சர்வதேச சந்தையின் சூழல் தற்போது சாதகமாக இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து வருகின்றதாம்.
ஆனால் இன்று வெள்ளி விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.63.30 ஆகவும், கிலோ ரூ.63,300 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.