இறங்கிய வேகத்தில் தொடர்ந்து ஏறும் தங்கம் விலை! கவலையில் மக்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்றும் சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூபாய் 4,931 ஆகவும், சவரன் ரூபாய் 39 ஆயிரத்து 448 ஆக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.4 உயர்ந்து, 4,935 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 32 அதிகரித்து, ரூபாய் 39 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை இறங்கிய வேகத்தில் ஏறி வருவதால் நடுத்தர மக்களிடையே இன்னும் ஏற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் டொலர் குறியீடு சரிந்தது மற்றும் மற்ற கரன்சியின் மதிப்பும் அதிகரித்துள்ளதே ஆகும்.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்து்ளது. கிராமுக்கு 20 பைசா சரிந்து ரூ.68.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.200 சரிந்து ரூ.68,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.