மலைபோல் இறங்கிய வேகத்தில் எகிறும் தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது சில தினங்களாக அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,271ஆகவும், சவரன், ரூ.42,168 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, 5,325 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 440 அதிகரித்து, ரூபாய் 42 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் 41 ஆயிரமாக குறைந்த தங்கத்தின் விலை தற்போது கடகடவென எகிறி வருகின்றது. இதனால் மக்கள் மத்தியில் ஏக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு காரணம் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதும், பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 80 பைசா குறைந்து ரூ.69.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.800 குறைந்து ரூ.69,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.