Today Gold Price: நீண்ட நாட்களுக்கு பின்பு எகிறிய தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?
ஆபரணத் தங்கத்தின் விலை சில தினங்கள் குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்து வருவது பாமர மக்களிடையே வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 328 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,625 ஆகவும் சவரன், ரூ.53,000 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 அதிகரித்து, 6,666 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 328 அதிகரித்து, 53 ஆயிரத்து 328 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதங்களில் 50 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கி செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருக்கின்றது. கிராமுக்கு ரூ.94.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.93,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |