ஒரே நாளில் மலைபோல் சரிந்த தங்கத்தின் விலை! சவரணுக்கு எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வருகின்றது. இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,590ஆகவும், சவரன், ரூ.44,720 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, 5,550 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து, 44 ஆயிரத்து 400 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.78.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.78,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 4 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |