நாளுக்கு நாள் மளமளவென சரியும் தங்கத்தின் விலை! காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் விலை குறைந்துள்ளது பாமர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவருகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,638 ஆகவும், சவரன், ரூ.45,104 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து,, 5,580 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 464 குறைந்து, ரூபாய் 44 ஆயிரத்து 640 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 0.80 பைசா குறைந்து ரூ.77.80 ஆகவும், கிலோவிற்கு ரூ.800 அதிகரித்து ரூ.77,800 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 3 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.