தங்கம் விலை அதிரடியாக குறைவு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
உக்ரைன் ரஷ்யா போரினால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்தே உயரத்தொடங்கியது. குறிப்பாக பிப்ரவரி 22ம் தேதி ரூ.38 ஆயிரமாகவும், மார்ச் 7ம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.27 குறைந்து, ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 குறைந்து, ரூ.67,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டில் மகிழ்ச்சியே இல்லையா? இந்த செடிகள் இருந்தால் உடனே அகற்றிடுங்க