Today Gold Price: தங்கம் விலை வரலாறு காணாமல் உயர்வு... ரூ.70 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி
ஆபரணத் தங்கத்தின் விலை, சமீப காலமாக பயங்கரமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.8,745 ஆகவும் சவரன், ரூ 69,960 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, 8,770 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து, 70,160 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வருடங்களில் 60 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 66 ஆயிரத்தை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.110.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,10,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |