நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு!
Gold and Silver Price : ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.
நேற்றை நிலவரப்படி, (ஆகஸ்ட் 19) காலை தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.

நேற்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14,400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து ரூ.1,15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,380-க்கும், சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.99,040-க்கும் விற்பனையாகிறது.

இதனிடையே, வெள்ளி விலையும் இன்று ரூ.10 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் தங்கம்: கிராம் ரூ.14,600 - சவரன் ரூ.1,16,800
18 காரட் தங்கம்: கிராம் ரூ.12,380 -சவரன் ரூ.99,040
வெள்ளி: கிராம் ரூ.260 - கிலோ ரூ.2,60,000
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |