பிக் பாஸ் கொடுத்த கோர்ட் வேர்ட்! டைட்டில் வின்னராகும் அந்தவொரு போட்டியாளர்: ரசிகர்கள் கண்டுபிடித்தது பலிக்குமா?
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் மூன்று போட்டியாளர்களிலும் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.
நிறைவிற்கு வரும் பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6, நாளைய தினத்துடன் நிறைவிற்கு வரவிருக்கிறது. இதில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் சுமார் 18 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபனிஸ்ட்டிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் செய்யப்பட்ட எவிக்ஷனில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார்.
டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
இந்நிலையில் நாளைய தினம் இந்த சீசனுக்கான டைட்டில் வின்னர் தெரிவு இடம்பெற போகிறது . இதற்காக போட்டியாளர்கள் தங்களுக்கு வாக்களியுங்கள் என கமராவின் முன் வேண்டி நிற்கிறார்கள்.
மேலும் அசீமிற்கு அதிகமான வாக்குகள் இருந்தாலும் கேரக்டர் ரீதியாக பார்க்கையில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.