பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீ நாமினேஷனா? ஃபைனலிஸ்ட்டில் தெரிவாக போவது இவரா?
பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீ நாமினேஷனில் ஷோனில் நுழையும் போட்டியாளர்கள் தொடர்பில தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 60 மேற்பட்ட நாட்களை கடந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஒரு குறிபிட்ட கதாபாத்திரத்தை தெரிவு செய்து, அவர்களை போல் நடித்து பணம் வாங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்து.
இதில் கதிரவன் மைக்கல் ஜாக்சன் போல் நடனமாடி சிறப்பாக டாஸ்க்கை கம்பிலிட் செய்து அதிகப்படியான பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் சரோஜா தேவி கதாபாத்திரத்தில் ரக்ஷிதாவும் கமலின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.
இந்த வார டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரம் அரக்கன் மற்றும் ஏஞ்சல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தீமைகள் செய்யும் போட்டியாளர்கள் நரகத்திலும், நன்மைகள் செய்யும் போட்டியாளர்கள் சொர்க்கத்திலும் இருப்பார்கள்.
இதன்படி, ஏடிகே, தனலெட்சுமி, அமுதவாணன், மணிகண்டன் என்போர் சொர்க்கத்தின் ஏஞ்சலாகவும் அசீம், சிவின், கதிர், விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் நரகத்தில் அரக்கர்களாகவும் இருக்கிறார்கள்.
இன்றைய தினம் இரண்டு பக்கத்திலிருக்கும் போட்டியாளர்களை இடம்மாற்றும்படி பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் தனலெட்சுமியை நகரத்திற்கும், ஏடிகே சொர்க்கத்திற்கும் இடம்மாற்ற வேண்டும் போட்டியாளர்கள் கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஃப்ரீ நாமினேஷனில் ஷோன்
இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீ நாமினேஷனில் ஷோனில் நுழையும் போட்டியாளர்களாக மணிகண்டன், ஜனனி, அமுதவாணன், ஏடிகே போன்றோர் பிக் பாஸால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தனலெட்சுமி நண்பர்கள் சார்பாக குழுக்களுக்கு போட்டியாளர்களை அழைத்துக் கொள்கிறார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதன்படி, இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.