பிக்பாஸ் வீட்டில் இப்படி செயற்பட முடியாது! பரபரப்பான ப்ரோமோ
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே மீண்டும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிக்ழச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 60 நாட்களை கடந்துள்ளது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்குகள் அடிப்படையில் இதுவரைக்கும் 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறினார் இதனை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் வெளியேறிய குயின்சி சுமார் ரூ 1.60 லட்சம் வரை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
நடுவராக செயற்படும் மணி
இதனை தொடர்ந்து தற்போது வரை பிக் பாஸ் சீசன் 6 , 60 நாட்களை கடந்துள்ள நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மணி மற்றும் விக்ரமனுக்கு எதிராக வாக்கு வாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் மணிகண்டன், விக்ரமனுக்கு எவ்வாறு விளையாட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.
இதனை கேட்ட விக்ரமன் அது என்னுடைய விருப்பம் என்று கோவமாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.