5 உயிரை பறித்த டைட்டன் நீர்மூழ்கி: என்னென்ன பொருட்கள் கிடைத்திருக்குன்னு தெரியுமா?
5 உயிரை பறித்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உயிரிழந்த 5 பேர்
சமீபத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமாகி உயிரிழந்தனர். இச்சம்பவம் உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 கோடீஸ்வரர்கள் சென்றனர்.
கடந்த வாரம் அவர்கள் சென்ற அந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் தகவல் இணைப்பு திடீரென்று துண்டாகி மாயமானது. இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
டைட்டனில் கிடைத்துள்ள பொருட்கள்
இந்நிலையில், நேற்று டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த பாகங்கள் கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மாகாணத்தின் செயின்ட் ஜான்ஸ் கடற்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பிறகு, டைட்டன் நீர்ழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து கடலோரப் படையின் ஜான் மாகர் பேசுகையில், டைட்டானிக் கப்பலுக்கு அருகில் ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை கிடைத்துள்ளன. இந்த மீட்புப் பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமையேற்று பணியாற்றியது. தற்போது, அந்த கப்பல் தன்னுடைய மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்ப உள்ளது என்றார்.
The Titan submersible has been unloaded in Canada, and the Coast Guard has reported the discovery of presumed human remains within the wreck. U.S. medical professionals will be responsible for analyzing the findings... pic.twitter.com/Ha8rBTdfMs
— Peché Africa ?? (@pmcafrica) June 29, 2023
Human remains (likely), titanium ring, rear equipment bay, carbon fibre hull amongst those recovered from the Titan Sub debris.
— Chariot Tan (@TanChariot) June 29, 2023
The recovery mission was led by Canadian ship Horizon Arctic, which carried a remotely operated vehicle operated by Pelagic Research Services.… pic.twitter.com/YNdeQsDRcp