14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடி கிரிவலம் சென்ற இளம்பெண்: பக்தி பரவசத்தோடு கண்டு ரசித்த மக்கள்
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றிருக்கிறார் ஆந்திரமாணவியொருவர்.
உலக நன்மைக்காக கிரிவலம்
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த நடன மாணவியான 25 வயதுடைய பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் ஒருவர் உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் நடனமாடியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அந்த மலையைச் சுற்றி கிரிவலப் பாதையில் வலம் வந்து வழிபடுவது வழக்கமாகும்.
இந்நிலையில், நேற்று பரதநாட்டியம் கற்றுள்ள பவ்ய ஹாசினி என்ற மாணவி அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்திற்கு வழிபாடு செய்து நடனம் ஆடியபடி கிரவலம் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.
அந்தவேளையில் மழையும் இலேசாக மழையும் பெய்ய ஆரம்பித்த வேளையில் அவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 14 கிலோமீட்டர் நடனம் ஆடியபடியே கோயில் முன்பு வந்து தனது கிரிவலத்தை முடித்திருக்கிறார்.
மேலும், இந்த இளம் பெண் உலக நன்மைக்காத்தான் இந்த கிரிவலத்தை ஆரம்பித்திருக்கிறார். இப்பெண்ணின் பக்தியையும் நடனத்தையும் கண்டு பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு பாராட்டியும் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |