பிரிட்ஜ் இப்படி யூஸ் பண்ணுங்க.. Current bill-லே வராது!
பொதுவாகவே வீட்டின் மினி களஞ்சியசாலையாகவே தற்போது பிரிட்ஜ் மாறி விட்டது.
பிரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாத பொருட்களை கூட அறியாமை காரணமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி வைத்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறு, குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல உடல்நல குறைபாடுகள் வரலாம்.
கோடைக்காலத்தில் பிரிட்ஜ் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பிரிட்ஜ் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. ஏனெனின் எதையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் பெரிதாக இருக்காது.
அப்படி குளிர்காலத்தில் பிரிட்ஜ் பயன்படுத்தும் பொழுது சில விடயங்களை பார்த்து கொள்வதால் மின்சாரக்கட்டணத்தை குறைக்க முடியும். அதே சமயம் பிரிட்ஜ் பழுதடையவும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், குளிர்காலத்தில் பிரிட்ஜ்ஜை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

மின்சார கட்டணத்தை குறைக்கும் டிப்ஸ்
1. குளிர்காலம் வந்து விட்டால் சூழல் நாம் நினைப்பதை விட கொஞ்சம் குளிர்ச்சியாக தான் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது உணவு பழுதாகுவதற்கு வாய்ப்பு குறைவு. குளிர்காலத்தில் உங்களுடைய வீட்டு பிரிட்ஜ்ஜை Thermostat-யை குறைவாக வைக்கவும். இப்படி செய்தால் மின்சார கட்டணம் குறைவாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவதும் குறையும்.
2. ஒற்றைக்கதவு மற்றும் நேரடி குளிர்ச்சி கொண்ட ஃப்ரிட்ஜ் என்றால் குளிர்காலத்தில் பனி அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது ஃப்ரிட்ஜ் பனியை தானாக அகற்றி விட வேண்டும்.

3. குளிர்காலத்தில் 15- 20 நாட்கள் ஒருமுறை கண்டிப்பாக ப்ரீசரில் உள்ள பனியை அகற்றுவதை வழக்கமாக வைத்து கொள்ளவும். இப்படி செய்தால் ஃப்ரீசர் நன்றாக வேலைச் செய்யும்.
4. பருவ கால மாற்றங்கள் ஏற்படும் சமயத்தில் ஃப்ரிட்ஜை நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும். பின்னால் வலைவாக இருக்கும் பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். முடிந்தால் ஃப்ரிட்ஜை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டு 24 மணி நேரம் திறந்து வைக்கவும். இப்படி செய்தால் உங்களுடைய வீட்டு பிரிட்ஜ்ஜை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |