செலவே இல்லாமல் ஒரே மாதத்தில் தொப்பை குறைய வேண்டுமா? இது உங்களுக்கான டிப்ஸ்
பொதுவாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொப்பை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவது உண்டு.
இதனை கடினமான உடற்பயிற்சினாலும், கட்டுப்பாடான உணவு பழக்கங்களினாலும் கட்டுபடுத்த முடியும்.
அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தொப்பையை குறைக்ககூடிய நெல்லிக்காய் பானமொன்று எவ்வாறு தயாரிப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 3
- கறிவேப்பிலை தூள் - 1 டீஸ்பூன்
- தேன் - இனிப்பு தேவையெனில் மாத்திரம்
- மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் சாறாக்கி எடுத்து கொள்ளுங்கள்.
பின்பு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கறிவேப்பிலை தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் தேன் போன்றவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த பானத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை கமறல் போன்று இருக்கும்.
இதனை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் தொப்பை குறைவதை பார்க்கலாம்.