இரசாயனத்தில் பழுக்கவைத்த மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?
கோடைகாலம் மாம்பழங்களின் காலமாகும். இது கோடை காலத்தில் தான் விளையும். இதனால் மக்கள் அதிகமாக மாம்பழங்களை வாங்குவார்கள்.
இதை பயன்படுத்தி சந்தைப்படுத்துபவர்கள் இயற்கைக்கு மாறான முறையில் ரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
வலுக்கட்டாயமாக பழுக்க வைக்கப்படும் இந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து வித்தியாசமாக நமக்கு தெரிவதில்லை.
நாமும் அதை முட்டாள் போல வாங்கி சாப்பிடுகிறோம். இனிமேல் அப்படி இருக்காமல் இரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை வேறாக்கி அதை இனங்காண இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
செயற்கையாக பழுக்க வைக்கபட்ட மாம்பழங்கள்
ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்களை ஒருவர் உட்கொள்ளும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, சில சமயங்களில் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, தீவிர பலவீனம், மார்பில் அமிலத்தன்மை போன்ற உணர்வு, தலைவலி போன்ற பொதுவான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக மாம்பழங்களை பழுக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. தாவர வளர்ச்சி சீராக்கியான எதெஃபோன், மாம்பழங்களை பழுக்க வைக்கப் பயன்படுகிறது.
இந்த இரசாயனங்கள் அசிட்டிலீனை உற்பத்தி செய்கின்றன, இது மாம்பழங்கள் அதன் சரியான நேரத்தை விட விரைவாக பழுக்க உதவுகிறது. செயற்கையாக பழுக்கவைத்த மாம்பழங்கள் பார்ப்பதற்கு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இது பார்க்க முழுப்பழமும் அப்படியே மஞ்சள் போர்வை போட்டது போல இருக்கும். பழத்தின் தண்டு இருந்தால் அதை நோண்டி விட்டு பார்க்கும் போது அந்த தண்டுக்கடியில் நல்ல மாம்பழ வாசனை வரும்.
அப்படி இல்லாமல் வாசனை வரவில்லை என்றால் அது செயற்கை பழம். மாம்ழம் பழுத்தாலும் பழுக்காவிட்டாலும் அது ஒரு வழக்கத்திற்கு மாறாக மென்மையாக இருந்தால் அது செயற்கையாக பழுத்தவை.
ஒரு பழுத்த மாம்பழத்தை பார்க்கும் போது அதன் ஒரு பகுதி கடினமாகவும் மற்றைய பகுதி மென்மையாகவும் இருந்தால் அது பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களாகும்.
மாம்பழத்தின் மீது ஒரு வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் ஏதாவது பொடி போல இருந்தால் அவை நல்ல மாம்பழம் அல்ல. அது செயற்கையாக பழுத்த மாம்பழங்கள்.
இனிமேல் மாம்பழம் வாங்கும் போது இதுபோல அறிகுறிகளை பார்த்து வாங்கினால் நீங்கள் உண்மையான மாம்பழத்தின் ருசியை உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |