இரவில் தூக்கம் வரவில்லையா? அப்போ இந்த தவறை திருத்திக்கோங்க
பொதுவாக சிலருக்கு படுத்துவுடன் தூக்கம் வருவது குறைவாக காணப்படும்.
இந்த பிரச்சினையால் அதிக தலைவலி, மனழுத்தம், வேலையில் குறவைான கவனம் போன்ற பிரச்சினைகள் எழும். இதனை சரியாக குணப்படுத்தாவிட்டால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
மேலும் இது போன்ற தருணங்களில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் படுத்தவுடன் தூக்கம் வரவைக்க சில உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் இருக்கிறது. மேலும் அவை தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.
தூக்கம் வர வைக்கும் சில பயிற்சிகள்
1. தூக்கம் வராமல் இரவு நேரங்களில் தவிக்கும் பொழுது மூச்சை மெதுவாக உள்ளெடுத்து வெளிவிட வேண்டும். இது போன்று சுமார் 10 தடவைகள் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியின் மூலம் கூட்டாக, லோகஸ் கோரூலியஸ் என்று அழைக்கப்படும் மூளையின் சிறிய குழு செல்களை கட்டுபாட்டிகுள் கொண்டு வரும். பெரியதாக வெளிச்சம் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும்.
2. காரணம் வெளிச்சம் அதிமாக இருந்தால் தூக்கமின்மை ஏற்படும். நமது கண்களில் படும் வெளிச்சம். கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளியைக் கண்டறியும் ஏற்பிகளைத் தூண்டுகிறது.
இதனால் மூளையின் சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ் என்ற பகுதிக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. இவ்வாறு செயற்படும் தூக்கமின்மை ஏற்படும்.
3. வேலையிலிருந்து வரும் போது அதிக மனழுத்தம், சோர்வு மற்றும் அதிகமான சிந்தனை என்பவை இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.
இது போன்ற தருணங்களில் மனதை முதலில் அமைதிப்படுத்த வேண்டும். அவ்வாறு அமைதிப்படுத்தா விட்டால் தூக்கமின்மை ஏற்படும்.
4. சிலர் பகலில் அதிம் தூங்குவார்கள் இது போன்று தூங்கும் போது இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படும்.
முடிந்தவரை இரவு தூக்கத்திற்காக பகல் வேளைகளில் தூங்குவதை குறைக்க வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
5. நன்றாக சூடு நீரில் குளிக்க வேண்டும், இவ்வாறு குளிப்பதன் மூலம் அழுக்குகள் வெளியேறி உடல் தூய்மையடையும் மற்றும் குளியல் எடுத்தவர்கள் 36 சதவிகிதம் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.