Laptop அதிகம் சூடாகுவதால் ஏற்படும் பிரச்சனைகள்.., இனி சூடாகாமல் இருக்க ஒரு சில டிப்ஸ் இதோ
அன்றாட வாழ்வில் Laptop என்பது அவசியமான ஒன்று. இதனை வேலை, படிப்பு, பொழுதுபோக்கு மற்றும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறோம்.
குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்கும், பெரியவர்கள் அலுவலக வேலைகளுக்கும் Laptop-ஐ பயன்படுத்துகிறார்கள்.
Laptop அதிகம் வெப்பமாவதால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் Laptop-ன் செயல்திறன் குறையும்.
மேலும் Laptop-ன் வன்பொருட்களை(Hardware) சேதப்படுத்தும். எனவே Laptop இனி சூடாகாமல் இருக்க ஒரு சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Laptop சூடாகாமல் இருக்க ஒரு சில டிப்ஸ்
Laptop-ஐ அணைக்காமல் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் சூடாகும் வாய்ப்பு அதிகம். எனவே நீண்ட நேரம் உபயோகிக்காமல் இடையில் சிறிது நேரம் அணைத்து விடுங்கள்.
Laptop-ஐ வெப்பமான இடத்தில் வைக்காமல் எப்பொழுதும் குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.
மேலும் Laptop-ஐ அதிக நேரம் உங்கள் தொடைகளில் வைத்து பயன்படுத்தினாலும் அதிக வெப்பம் ஏற்படும்.
Laptop-ன் உள்ளே தூசி படிவதால், குளிரூட்டும் அமைப்பு சரியாக செயல்பட முடியாது. எனவே, Laptop வெப்பமாகாமல் இருக்க உட்புறத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியமாகும்.
Laptop-ன் குளிரூட்டும் அமைப்பில் கோளாறு இருந்தால், உடனடியாக சரிபார்ப்பு மையத்தில் கொடுத்து சரி செய்ய வேண்டும்.
முக்கியமாக, அதிக நேரம் Charge போட்டுக்கொண்டே Laptop-ஐ பயன்படுத்துவதும் சூடாவதற்கான காரணமாகும்.
தொடர்ந்து உங்கள் Laptop சூடாகி வந்தால், Laptop-ஐ ஒரு நிபுணரிடம் கொண்டு செல்லவது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |