இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
தலைமுடி என்பது மனிதனின் அழகையும், ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இயற்கையான தலைமுடி வளர்ச்சி என்பது சில காரணிகளின் அடிப்படையில் நடக்கிறது.
உதாரணமாக, மரபியல், உணவு பழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் தலைமுடி வளர்ச்சி சீராக நடக்கிறது. ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட காரணங்கள் சீராக இல்லாததால் தலைமுடி வளர்ச்சி குறைந்து உதிர்வு அதிகமாகிறது.
தேவையான ஊட்டச்சத்துகள், சிறந்த பராமரிப்பு மற்றும் பொறுமை ஆகியன இருந்தால் தலைமுடி அடர்த்தியாக பார்ப்பதற்கு பட்டுப்போன்று காணப்படும். இதனால் நீங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள்.
தற்போது தலைமுடி உதிர்வு பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும். உடல் மற்றும் வெளிநிலை காரணங்களால் இளம் வயதில் வழுக்கையாக சிலர் இருக்கிறார்கள்.
தூக்கமின்மை, உடல் சோர்வு, தைராய்டு பிரச்சனை, அதிக ஹிட்/கெமிக்கல் பயன்படுத்தல், தோல் பிரச்சனைகள் உள்ளிட்ட பிற காரணிகளாலும் தலைமுடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே தலைமுடி எந்தவித பிரச்சினையும் அழகாக வளர வேண்டும் என்றால் குறிப்பிட்ட விடயங்களை தெரிந்து கொண்டு, செயற்படுத்துவது அவசியம்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் பழக்கங்கள் மற்றும் கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள்
பயோட்டின், ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் டி போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு பழக்கம் இருப்பது அவசியம். ஏனெனின் உணவில் உள்ள முக்கிய மினரல்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அதே போன்று தலைமுடியும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
மசாஜ்
உச்சந்தலை மற்றும் தலையின் பிற பகுதிகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் எதிர்பார்ப்பதை விட மசாஜ் மூலம் கூடுதல் நன்மைகளை தரும். மசாஜ் செய்யும் பொழுது ரோஸ்மேரி அல்லது பெப்பர்மின்ட் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தினால் நல்லது.
ஹீட் ஸ்டைலிங்கை தவிர்க்கவும்.
ஸ்ட்ரைட்னர் மற்றும் கர்லிங் அயர்ன்களிலிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் தலைமுடியை பலவீனப்படுத்தும். இதனால் தலைமுடி உடைந்து முடியின் வேர்களில் அல்லாமல், தலைமுடியின் தண்டின் குறுக்கே உள்ள இழைகள் உடையும். எனவே அடிக்கடி உங்கள் கூந்தலுக்கு ஹீட் ஸ்டைலிங் செய்வதை தவிர்க்கவும். பாதுகாப்பான ஹீட் ஸ்டைலிங்கிற்காக ஸ்ப்ரே வடிவில் இருக்கும் ஹீட் ப்ரொட்டக்டன்ட் தயாரிப்புகளை பயன்படுத்தினால் தலைமுடி சேதங்களை கணிசமாக குறைக்கலாம்.
சீரான முறையில் கூந்தலை ட்ரிம் செய்யவும்.
6–8 வாரங்களுக்கு ஒருமுறை தலைமுடியின் முனைகளை வெட்டி எடுப்பது, முடியின் முனைகள் பிளவுபடுவதைத் தடுக்க உதவியாக இருக்கிறது. பிளவு பாதிப்பானது முடி வளர்ச்சியை தடுக்கும். ஆரோக்கியமான முடிகள் தலையில் இருப்பது ஒட்டுமொத்தமாக கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்கிறது.
சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்துகிறது. வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மை கொண்டதாக மாற வழிவகுக்கும். எனவே வெயிலில் வெளியே செல்லும் போது தொப்பி அணியுங்கள். அப்படி அணியும் பொழுது புற ஊதா பாதுகாப்பு பெற (UV-protectant) ஹேர் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
