வெறும் 30 நாளில் புருவம் அடர்த்தியாக வளரணுமா? இந்த வீட்டு வைத்தியமே போதும்
பொதுவாகவே பெண்களாக பிறந்த அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும்.
பெண்களின் அழகை இயற்கையாகவே மேம்படுத்தி காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பெண்களின் புருவம் வில் போல் அழகாக அமைந்து இருந்தால், சுமாராக காணப்படும் பெண்கள் கூட மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் தெரிவார்கள்.
பெண்களின் கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் புருவம் சரியாக இல்லையென்றால், அது கண்களின் வசீகர தன்மையை முற்றாக இல்லாமல் செய்துவிடும்.
வெறும் 30 நாட்ககளில் எவ்வாறு புருவங்களை அழகாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
புருவங்களை அடர்த்தியாக்கும் எளிய வழிகள்
விளக்கெண்ணெய் : தினமும் தூங்குவதுற்கு முன்னர் புருவங்களில் விளக்கெண்ணெய் தடவி வந்தால் 30 நாட்களிலேயே புருவங்கள் அடர்த்தியாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் : ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி மதனை அடுப்பில் வைத்து சூமாக்கி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வந்தால் புருவங்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
வெங்காயச் சாறு : வெங்காயச் சாற்றை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தினமும் தூங்க செல்லும் முன்னர் புருவங்களில் தடவி வந்தால், புருவத்தில் விரைவில் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் விரைவில் அடர்த்தியானதும் அழகானதுமான புருவங்களை பெறாலாம்.
கற்றாழை : கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தேய்த்து வருந்தால், அங்கு ஏற்பட்டுள்ள தொற்றுகள் நீங்குவதுடன் புருவங்கள் விரைவில் அடர்த்தியாக மாறும்.
சீரம் : புருவத்துக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கென சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன்னர் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர் சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவி மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவினால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
