வீட்டில் எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்?
எலிகளை ஒழிப்பதற்காக சிறந்த வழிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான வீடுகளில் எலிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். இதனை எவ்வாறு விரட்டுவது என்று தெரியாமல் பலரும் திணறவும் செய்கின்றனர்.
ஏனெனில் உணவுப்பொருட்களை நாசம் செய்வதுடன், மனிதர்களுக்கு இரவில் அதிக தொந்தரவும் கொடுக்கின்றது. சில தருணங்களில் கால் விரல்களை கடிக்கவும் செய்துவிடுகின்றது.
இவ்வாறு நிகழ்வதால் பல நோய்களின் தாக்குதல் ஏற்படுகின்றது. தற்போது எலி தொல்லையிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்?
வீட்டில் சிறிய துளைகள் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எலிகள் துளைகளில் தான் வசிக்கும் என்பதால், எங்காவது துளைகள் காணப்பட்டால் அவற்றினை உடனே மூடுவது சிறந்தது.
வீட்டில் எலிப்பொறிகளைப் பயன்படுத்துவது அவசியமாகும். குறித்த எலிப்பொறியில் சீஸ், வேர்க்கடலை வெண்ணெய் அல்லது சாக்லேட் போன்றவற்றை வைத்தால் எளிதில் எலிகள் பிடிபட்டுவிடும்.
Getty Images
எலுமிச்சை சாற்றுடன் மிளகுத்தூள் கலந்து எலிகள் வசிக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். இதன் வாசனையைத் தாங்க முடியாமல் எலிகள் ஓடிவிடுமாம்.
புதினா எண்ணெய்யைக் கொண்டு எலிகளை எளிதில் விரட்டலாம். குறித்த எண்ணெய்யின் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. ஆதலால் பஞ்சில் எண்ணெய்யைத் தடவி வீட்டின் மூலைகளிலும், எலிகள் வரும் இடங்களிலும் வைக்க வேண்டும்.
அல்ட்ராசோனிக் கருவிகள் எலிகளுக்கு தொந்தரவூட்டும் ஒலி அலைகளை உருவாக்கும். இதற்கு நீங்கள் வீட்டில் இந்தக் கருவியைப் பொருத்தினால் போதுமாம்.
கரப்பான் பூச்சிகளோ, ஈக்களோ, எலிகளோ வீடு அழுக்காகவும், குப்பையாகவும் இருந்தால் தான் வருமாம். ஆகவே, சமையலறைஈ உணவு சேமிக்கும் அறை ஆகியவற்றை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக் கொள்ள வெண்டும்.
மாவில் போரிக் அமிலத்தைச் சேர்த்து எலிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும். இதனால் அந்தப் பக்கம் எலிகள் வரத் துணியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |