இருமல், மார்பு சளியை குறைக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்
பருவநிலைகள் மாறும் போது சளி, இருமல் வருவது இயல்பான ஒன்றே, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் இதனை எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் சமாளித்துவிடலாம்.
இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே குணப்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
* சளி இருமலுக்கான அறிகுறிகள் வந்துவிட்டாலே முதலில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்துவிடுங்கள், இது தொண்டையில் உள்ள கிருமித்தொற்றுகளை வெகுவாக குறைத்துவிடும்.
* சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து பருகுவது சளியை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துவிடும், வாரம் ஒருமுறை இதை தொடர்ந்து செய்து வந்தாலே சளி, இருமல் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
* ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிய பின்னர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும், இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து சூடு ஆறிய பின்னர் குடித்தால் பலனை பெறலாம்.
* காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து குடித்து வர சளித்தொல்லை நீங்கும், பெரியவர்களாக இருந்தால் காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வரலாம்.
* குழந்தைகளுக்கு சளித்தொல்லை நீங்க தேங்காய் எண்ணெயை காய்ச்சி கற்பூரம் இட்டு வெதுவெதுப்பாக நெஞ்சில் தேய்த்துவிடலாம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இதை செய்து வந்தாலே நெஞ்சு சளி குறைவதை காணலாம்.
ShutterStock
* சீரகம் மற்றும் மிளகை வெறும் வாணலியில் போட்டு வறுத்துவிட்டு, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் கிருமித்தொற்றுகள் நீங்கி வறட்டு இருமல் சரியாகும்.
* இஞ்சி சாறுடன், துளசி இலை சாற்றையும் சம அளவு கலந்து கொண்டு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.