14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டாக் பிரபலம்.. கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தின் கோத்தவாலாசா பகுதியைச் சேர்ந்தவர் பார்கவ்.
இவர், டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர். தற்போது, சில காலமாக சமூக ஊடகத்தில், 'ஃபன் பக்கெட்' என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சினகிரி காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள சினகிரி காலனியில், தான் பார்காவ் வசித்து வருகிறார். சிறுமியும் சகோதரன் என்கிற முறையோடு பழகியுள்ளார்.
அதனை பயன்படுத்திக் கொண்ட அவர், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் விசாரித்ததில் பார்கவ் என தெரியவந்ததால், சிறுமியின் தாய் 16 ஆம் தேதி, சிறுமியின் தாய் பெண்டூர்த்தியில் உள்ள காவல் நிலையத்தில் பார்கவ் மீது புகார் கொடுத்தார்.
அதன் பின்னர். விசாகப்பட்டினம், ஏ.சி.பி பிரேம் காஜலின் உத்தரவின் பேரில் போலீசார் பார்கவ்வை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.