கிராமத்திற்குள் நுழைந்த புலி... கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்த பதரவைக்கும் காட்சி!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்று, ஒருவரைத் தாக்கியதுடன்,ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்த பதரவைக்கும் சம்பத்தின் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிராமவாசிகள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், கோபால் கோல் என்ற இளைஞரை அந்தப் புலி தாக்கியதுடன், ஒரே பாய்ச்சலில் அவரைக் கீழே தள்ளியது. இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பந்தவ்கர் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அந்த இளைஞரை மீட்டு, கட்னி மாவட்டத்தில் உள்ள பர்ஹி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனை தாக்கிய பின்னர், துர்கா பிரசாத் திவேதி என்ற நபரின் வீட்டிற்குள் புலி நுழைந்து, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர். பயத்தின் காரணமாக பலர் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் ஏறி அமர்ந்துக்கொண்டனர்.

கிராம மக்கள் குறிப்பிடுகையில், காலை 10 மணியளவில் முதலில் புலியைக் கண்டடுள்ளனர். அப்போது அந்த புலியானது பன்பதா இடையக மண்டலத்திற்கு அருகிலுள்ள ஒரு பயிர் வயலின் எல்லையில் சுற்றித் திரிந்ததுள்ளது.
புலியைக் கண்டவுடன் கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நண்பகலுக்குள் புலி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டன் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Tiger strays into village near Madhya Pradesh's Bandhavgarh Reserve, attacks man pic.twitter.com/fWuqiFFWll
— NDTV (@ndtv) December 29, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |