துணிவு பட பாணியில் கல்லூரி மாணவன் அரங்கேற்றிய கொள்ளை முயற்சி! கையும் களவுமாக சிக்கிய சோகம்
துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த கல்லூரி மாணவர் வசமாக சிக்கியுள்ளார்.
துணிவு பட பாணியில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் இன்று வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையில், திடீரென உள்ளே நுழைந்த இளைஞர், கத்தி மற்றும் வெடிகுண்டை, துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சமயோஜிதமாக செயல்பட்டு குறித்த கொள்ளையனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞர் காந்திநகர் பகுதியினைச் சேர்ந்த சுரேஷ்(19) என்பவர் என்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரில் இரண்டாம் ஆண்டு படிப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அஜித் படமான துணிவு படத்தை அவதானித்து இந்த கொள்ளை சம்பவத்தினை அரங்கேற்ற வந்ததாக இளைஞர் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.