72000 நாடிகளையும் வளப்படுத்தும் தோப்புக் கரணம்: இதனால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?
தோப்புக்கரணப்பயிற்ச்சி உடலுக்கு தேவைப்படும் மக்கியமான பயிற்ச்சிகளில் ஒன்றாகும்.பொதுவாக பாடசாலைகளில் மாணவர்களின் மூளை செயல்திறன் விரைவாக இருக்க இந்த பயிற்ச்சியை ஆசிரியர்கள் பரிந்துரைப்பார்கள்.
இது காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது. இந்த காரணத்தினால் தான் இத மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
இதை தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது. மாணவர்கள் கல்வியில் எப்போதும் சிறந்து விளங்க தோப்புகரணம் நன்மை தரும். பெரியவர்கள் இதை செய்வதால் உடலுக்கு என்னென்ன மாற்றம் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தோப்பு கரணம்
தோப்புக்கரணம் போடும்போது நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும். பின்னர் இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும்.
அப்போது, கட்டை விரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும். அதேபோல, வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
2 கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையே தோப்பு கரணம் எனப்படுகின்றது. இப்படி செய்து எழும்பும் போது மூச்சை வெளியே விட்டபடியே எழ வேண்டும்.
இந்த பயிற்ச்சி நாம் செய்யும் போது நம்முடைய வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.
காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நம்முடைய ஞாபகசக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.இதனால் மூளையிலுள்ள நரம்புகள் வலிமை பெறுகிறது.
பெரியவாகள் உட்காந்து எழந்து இதை செய்யும் போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்ற தசை இயங்கி, ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ், மேல்தாடை, ஈரல், காது நரம்பு என அத்தனை உறுப்புகளின் தொடர்பு புள்ளிகளும் உள்ளதால்தான், மொத்த உடல் உறுப்புகளும் பலன் பெறுகின்றன.
அதிக நேரம் வேலை செய்பவர்கள் இதை செய்யலாம். இதனால் கால்கள், இடுப்பு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது. செரிமானம் அதிகமாகிறது. தூக்கமின்மை பிரச்சனை தீர்கிறது.
இடுப்பிலுள்ள ஜவ்வு, எலும்பு தசைகளும் பலம்பெறுகின்றன. வைத்தியசாலையில் கர்ப்பிணிகளை தோப்புக்கரணம் போட சொல்வார்கள்.
இதனால் கருப்பை சுருங்கிவிரிந்து சுகப்பிரசவம் எளிதாக நடக்கும். இதன் காரணமாக அமெரிக்காவில் இன்று தோப்புக்கரணம் தலைச்சிறந்த உடற்பயிற்சி என்று விஞ்ஞானிகளால் பொற்றப்படுகின்றது.
இந்த தோப்புகரணத்தை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் போடும்போதுதான் அதிக பலனை பெற முடியும். இது தவிர ஒருவர் ஒரு நாளைக்கு 10 தடவைகளுக்கு குறையாமல் செய்ய வேண்டும்.
இது இல்லாமல் தினமும் 15 முதல் 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும். ஆனால் பெண்கள் கர்ப்ப காலம், மாதவிடாய் காலத்தில் செய்வதை தவிர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |